இந்த வலைப்பதிவில் தேடு

சாதி அடையாளத்தை குறிக்கும் வண்ணக் கயிறு கட்ட தடை விதித்த விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் : அமைச்சர் செங்கோட்டையன்

வியாழன், 15 ஆகஸ்ட், 2019




நிருபர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: ஜாதி மற்றும் மதத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் செயல்படுவதாகவும், அதனை சரிபார்க்க வேண்டும் என ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கை அப்படியே, மாவட்ட கல்வி இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இது அரசின் கவனத்திற்கு வரவில்லை.


எது நடைமுறையில் இருக்கிறதோ அந்த நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது அரசின் கொள்கை. அதனை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். பழைய நடைமுறையே தொடரும் வண்ணக்கயிறு கட்டுவது தொடர்பான அரசின் சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயற்சி மையம் அடுத்த வாரம் துவங்கப்படும். 

இலவச நீட் பயிற்சி மையத்தில் சேர 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு முதல் சாரண சாரணிய இயக்க மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்படும் என்றார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.மேலும் இலவச நீட் பயிற்சி மையத்தில் சேர 20,000 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளருக்கான தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.


மேலும் சாதியை குறிக்கும் வண்ணக்கயிறு கட்டிவர தடை என சுற்றறிக்கை வெளியானது கவனத்திற்கு வரவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியான சுற்றறிக்கை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். சுற்றறிக்கையை திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்ற நிலையில், அரசின் கவனத்திற்கு வராமல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து ஜாதி அடையாளத்தை குறிக்கும் கயிறு கட்ட தடை விதித்த விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் என்று கூறினார். முன்னதாக பள்ளி மாணவர்கள் சாதியை குறிக்கும் வண்ணக் கயிறு கட்டக் கூடாது என்று ஆகஸ்ட் 12ல் பள்ளிக்கலவித் துறை சுற்றறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent