தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி வருகின்றனர். இதற்கிடையே ஆசிரியர்களுடன் பேச்சு நடந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் 4வது கூட்டம் பிப்ரவரி 4ம் தேதி மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள பள்ளிக்கல்வித் துறை கூட்டரங்கில் நடைபெற உள்ளது. ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக