இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளி ஆசிரியர் கைது

செவ்வாய், 21 ஜனவரி, 2025

 



திருப்பூர் அருகே அரசு பள்ளி அறிவியல் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். ஆசிரியர் சிவக்குமாரை(54) கைது செய்து காங்கேயம் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டது.


திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே அரசு உயர் நிலைப்பள்ளியில் நுாற்றுக்கணக்கானோர் படித்து வருகின்றனர். 


இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக சிவக்குமார், 54 என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், ஆறாம் வகுப்பு மாணவி, ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. 


இதுதொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். சம்பந்தப்பட்ட மாணவி உட்பட மேலும் சில மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. இதுதொடர்பாக, ஆசிரியர் சிவக்குமார் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent