திருநெல்வேலி மாவட்டம்
அய்யா வைகுண்டரின் அவதார நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அவரது அவதார நாளன்று பெருந்திரளாக மக்கள் வருகை தருவது வழக்கம். இதையொட்டி, கன்னியாகுமரி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதோப்புக்கு வருகை தருவர்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்று(பிப். 20) உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 15-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம்
அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 4, 2025 அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் மாற்றமின்றி நடைபெறும்.
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (15.03.2025) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்
அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 4, 2025 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் மாற்றமின்றி நடைபெறும்.
கன்னியாகுமரி மாவட்டம்
அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அன்றைய தினம் ஏதேனும் பொதுத்தேர்வுகள் இருந்தால் அந்த அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அறிவித்துள்ளார்
விழுப்புரம் மாவட்டம்
மேல்மலையனூர் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4 ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்தூல் ரஹ்மான் உத்தரவு ! மார்ச் 15 ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக