கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, பு.மாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி மகன் காமேஸ்வரன், 12; உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை, பள்ளி வளாகத்திலேயே ஊழியர்கள் தீ வைத்து எரித்தனர். தீ அணையாமல் இருந்த நிலையில், மதியம், 12:40 மணிக்கு உணவு இடைவேளையின் போது வெளியே வந்த மாணவர் காமேஸ்வரன், எரிந்து கொண்டிருந்த குப்பையில் தவறி விழுந்தார்.
அவரது கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. ஆசிரியர்கள் அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக