இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளிகளுக்கு இணைய சேவை: மாநில திட்ட இயக்ககம் வாயிலாக பணத்தை செலுத்த கல்வித்துறை ஏற்பாடு

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

 



அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் இணைய சேவைக்கான மாதாந்திர கட்டணம் 2 திட்டங்களாக வகுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த 2 திட்டங்களின் அடிப்படையில், தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.710, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.900 இணைய சேவை கட்டணமாக விடுவிக்கப்படும் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.


வருகிற ஏப்ரல் மாதம் முதல் இணைய சேவைக்கான மாதாந்திர கட்டணத்தை மாநில திட்ட இயக்ககம் வாயிலாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நேரடியாக செலுத்துவதற்கு ஏதுவாக பள்ளிக் கல்வித்துறை சில உத்தரவுகளை பள்ளிகளுக்கு விடுத்திருக்கிறது. ஏற்கனவே பள்ளிகள் இணைய சேவை கட்டணத்தை செலுத்துவதில் பாக்கி வைத்தது தொடர்பான செய்தி பரபரப்பான நிலையில், கல்வித் துறை இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அதன்படி, பி.எஸ்.என்.எல். இணைய சேவை தரவுகளை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் அதனை உடனடியாக செய்ய வேண்டும். பிற இணைய சேவை நிறுவனங்கள் மூலமாக இணைய சேவை பெற்றிருக்கும் அரசு பள்ளிகளும், இணைய சேவை வசதியை பெறாத பள்ளிகளும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சமக்ர சிக்சா திட்டத்தின் மூலம் இணைய வசதியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent