இந்த வலைப்பதிவில் தேடு

நாளை 28.07.2025ஆம் தேதி 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ஞாயிறு, 27 ஜூலை, 2025

 




ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலை நாட்களாக அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா.


செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா 26-ந்தேதி சனிக்கிழமை தொடங்கி 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி 26-ந்தேதி மங்கள இசையுடன் தொடங்கும் நிகழ்ச்சியில் பங்காரு அடிகளாரின் உருவ சிலைக்கும், ஆதிபராசக்தி அன்னைக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, வருகிற 28-ந்தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இவற்றை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 9-ந்தேதி வேலை நாட்களாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent