இந்த வலைப்பதிவில் தேடு

அரசு கல்லூரிகளில் 574 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்

செவ்வாய், 22 ஜூலை, 2025

 



அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் 574 தற்​காலிக கவுரவ விரிவுரை​யாளர்​களை நியமிப்​ப​தற்​கான ஆன்​லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்​கியது. இதை உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன் தொடங்​கி​வைத்​தார்.


இதுதொடர்​பாக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அரசு கலை அறி​வியல் கல்லூரி​களில் நடப்​புக் கல்வி ஆண்​டுக்​கான மாணவர் சேர்க்கை நடை​பெற்று வகுப்​பு​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.


ஏழை மாணவர்கள் அனை​வருக்​கும் சமமான உயர்​கல்வி கிடைக்க வேண்​டும் என்ற நோக்​கில் முதல்​வரின் ஆணை​யின்​படி இந்த ஆண்டு புதி​தாக 15 அரசு கலை அறி​வியல் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்டு இருக்​கின்​றன. அக்​கல்​லூரி​களில் பல்​வேறு பாடப்​பிரிவுகளில் 15 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இடங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.


இக்​கல்​லூரி​களில் நிரந்தர ஆசிரியர்​கள் பணி​யமர்த்​தப்​படும் வரை, மாணவர்​களின் கல்வி பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க 574 கவுரவ விரிவுரை​யாளர்​களை பணி​யமர்த்த முதல்​வர் ஆணை​யிட்​டுள்​ளார். கவுரவ விரிவுரை​யாளர் பணி​யிடங்​களை உரிய கல்வித்தகுதி உடைய​வர்​களை கொண்டு வெளிப்​படைத் தன்​மைய​யுடன் நிரப்ப கல்​லூரி கல்வி ஆணை​யருக்கு அனு​மதி வழங்கப்​பட்​டுள்​ளது.


கவுரவ விரிவுரை​யாளர் பதவிக்கு www.tngasa.org என்ற இணை​யதளம் வாயி​லாக விண்​ணப்​பிக்க வேண்​டும். 34 பாடப்​பிரிவு​களுக்கு அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள 574 பணி​யிடங்​களின் விவரங்​கள் இணை​யதளத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளன. உரிய தகு​தி​யுடைய​வர்​கள் மேற்​குறிப்​பிட்ட இணை​யதளத்தை பயன்​படுத்தி ஆக.4-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். தமிழக அரசின் நெறி​முறைகளை பின்​பற்​றி​யும் கல்​வித்​தகு​தி, நேர்​முகத் தேர்வு மதிப்​பீடு​களின் அடிப்​படை​யிலும் தெரிவு செய்​யப்​படு​வர். இவ்​வாறு அமைச்சர் கூறி​யுள்​ளார்.


தற்​காலிக கவுரவ விரிவுரை​யாளர் பணிநியமனத்​துக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவை சென்னை ராணி மேரி கல்​லூரி​யில் நேற்று நடை​பெற்ற பட்​டமளிப்பு விழா​வின்​போது உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன் தொடங்​கி​வைத்​தார். அப்​போது கல்லூரி கல்வி ஆணை​யர் ஏ.சுந்​தர​வல்​லி, ராணிமேரி கல்​லூரி​யின் முதல்​வர்​ உமா மகேஸ்​வரி ஆகியோர் உடனிருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent