இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

வியாழன், 17 ஜூலை, 2025

 



ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேசுவரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அருள்ராஜன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவிகளிடம் வகுப்பறையில் பாலியல் தொடர்பாக ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.


இதுகுறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜிடம் புகார் அளித்தனர். பின்னர் தர்மராஜ் இதுகுறித்து பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 


அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா விசாரணை நடத்தினார். ஆசிரியர் அருள்ராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent