இந்த வலைப்பதிவில் தேடு

கேரளாவில் கூலி வேலைக்காக சென்ற தமிழக நபரை பார்த்து வாயடைத்துப்போன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்

புதன், 13 ஆகஸ்ட், 2025

 




கேரளாவில் கூலி வேலைக்காக சென்ற தமிழக நபரை பார்த்து வாயடைத்துப்போன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விபரம் பின்வருமாறு:


கேரளாவில் ஒருபள்ளிக்கூடத்தின் அருகிலுள்ள மரங்களை வெட்டி சுத்தம் செய்ய சென்ற தொழிலாளி வகுப்பறைக்குள் நுழைந்து கூளாக வகுப்பை எடுத்ததை கண்ட குழந்தைகளும் ஆசிரியர்களும் வாயடைத்துப் போனார்கள். குடும்பத்தை காப்பாற்ற தமிழ்நாட்டிலிருந்து கூலி வேலைக்கு சென்ற  எம்.ஏ மற்றும் எம்.எட் ரங்கநாதன் தற்போது கேரளாவில் பிரபலமாகியுள்ளார்


"டீச்சர் இந்த இடத்தில் உங்களுடைய கற்பித்தல் முறை சூப்பர்" கூலி வேலை செய்ய பள்ளிக்கு வந்த வேலைக்காரனின் வார்த்தைகளைக் கேட்டு ஆசிரியர் ஆச்சரியப்பட்டார். நீண்ட நேரம் வகுப்பறையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவரிடம் ஆசிரியர்கள், என்ன விஷயம் என்று விசாரித்த போது அவர் கூறியதை கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 


இரண்டு முதுகலை பட்டங்கள் பெற்ற அந்த நபர் தனது குடும்பத்தை காப்பாற்ற கூலி வேலை செய்து கொண்டு அவர்கள் முன் நின்று கொண்டிருக்கிறார் என்று உடனடியாக, பள்ளி முதல்வர் ஷீஜா சலீம் அவரை வகுப்பறைக்கு அழைத்தார். வேலை செய்து முடித்த பிறகு வியர்வையுடன் கூடிய உடையில் மாணவர்களுடன் உரையாடினார். ஆசிரியர்களில் ஒரவர் அவருடைய தமிழ் மொழியை மொழி பெயர்தார்கள். இந்த அசாதாரண தருணங்களுக்கான இடமாக ஈரட்டுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாறிய தருணம் அது.


தமிழ்நாடு தேனியைச் சேர்ந்த எம்.ரங்கநாதன்(35) முதுகலை பட்டதாரியான கூலி தொழிலாளி. கடந்த ஒரு வருடமாக அங்கு கல் வேலை, தச்சு வேலை மற்றும் விவசாய வேலைகளைச் செய்து வருகிறார். தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள கோம்பேயில் வசிக்கிறார். 


மதுரை உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியாக  தமிழில் முதுகலை பட்டமும் பெற்றார். மார்த்தாண்டம் புனித ஜோசப் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் பி.எட் பட்டமும் பெற்றார். திருச்சி ஜீவன் கல்வியியல் கல்லூரியில் எம்.எட் பட்டமும் பெற்றார், பி.எட் கல்லூரி ஆசிரியராக அனைத்து தகுதிகளும் அவர் பெற்றுள்ளார். 😢 என்பதை அங்குள்ள ஆசிரியர்கள் உணர்ந்த தருணம் அது.


ஆசிரியராக வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றியதற்காகவும், குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுக்க வாய்ப்பு வழங்கிய முதல்வருக்கு வாழ்த்துக்கள்.👏👏👏 என்று பலரும் பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent