மாநில கல்வி கொள்கையை உருவாக்க 2022-ல் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஜூலை மாதம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாநில கல்விக்கொள்கை குழு பரிந்துரைத்தது. மேலும், நீட் தேர்வு கூடாது, நீட் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களை விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பள்ளிக்கல்வியில் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழில் 650 பக்கங்களிலும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களிலும் கொண்ட மாநில கல்விக் கொள்கையை நாளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையில், 3, 5, மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அதேபோல் பள்ளிகளில் சேர்வதற்கு எந்தவிதமான நுழைவுத் தேர்வையும் நடத்த கூடாது என்றும், இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை 11ஆம் வகுப்பில் செயல்படுத்துவதற்குப் பதிலாக 9ஆம் வகுப்பில் செயல்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்லூரிச் சேர்க்கையைப் பொறுத்தவரை 11 மற்றும் 12 ஆகிய வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்தே உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக