இந்த வலைப்பதிவில் தேடு

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை SEP : அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

 



தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 


“எதிர்காலத்திற்கு தேவையான பார்வையுடன் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை (பள்ளிக் கல்வி) உருவாக்கியுள்ளோம்”


இந்தக் கல்விக் கொள்கையின் மூலமாக… 


🙇படித்து மனப்பாடம் செய்வதை விட, சிந்தித்து கேள்விக் கேட்கும் மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்.


⚡️எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றலை வழங்கவுள்ளோம்.


👩‍💻தொழில்நுட்ப மனம் படைத்த மாணவர்களை உருவாக்குவோம்.


👩‍🎨படிப்பவர்களாக மட்டுமல்ல! படைப்பாற்றல் உள்ளவர்களாக மாணவர்களை உருவாக்குவோம்!


🤾‍♀️கல்வியுடன் உடற்பயிற்சியும் இணைக்கப்படும்.


📋தாய்மொழித் தமிழ் நமது அடையாளமாக, பெருமிதமாக இருக்கும்.


📕தமிழும் ஆங்கிலமும் என இருமொழிக் கொள்கைதான் நமது உறுதியான கொள்கையாக இருக்கும்.


🏫ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும்!


📺கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ‘ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை’ எனும் நிலையை உருவாக்கும்.


👨‍🎓மதிப்பெண்களாக இல்லாமல் மதிப்பீடுகளை நோக்கி தேர்வுகள் அமையும்.


📚பசுமைப் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.


🧑‍🎓‘நான் முதல்வன்’ திட்டம் வாழ்க்கைக்கும் வழிகாட்டுதலாக அமையும்.


👨‍🔬அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதிக்க மாட்டோம்!


*“அனைவருக்கும் கல்வி! அனைவருக்கும் உயர்தரமான கல்வி” இதுதான் நமது திராவிட மாடல் அரசின் கல்விக் கொள்கை!* - மாண்புமிகு முதலமைச்சர்  @mkstalin அவர்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent