கர்நாடகாவில் 270 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள அரசு ப ள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில் பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை. இது ஒரு புறமிருக்க, பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு, 2024 - 25 கல்வியாண்டிற்கான வெளியிட்ட அறிக்கை, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
அதில், 'கர்நாடகாவில் 270 அரசு பள்ளிகளில் மாணவர்களே கிடையாது. ஆனால், அப்பள்ளிகளில் 308 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்' என கூறப்பட்டுள்ளது. இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
'மாணவர்களே இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் இருப்பது ஏன்; அவர்களின் பணி என்ன. வேலையே செய்யாதவர்களுக்கு சம்பளம் வழங்குவதா?' என, பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து, மாநில பள்ளி கல்வித்துறை மற்றும் எழுத்தறிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது மாநில அரசின் கொள்கையாக உள்ளது.
இதனால், மாணவர்கள் இல்லாத பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். மாணவர்களே இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தால், அந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஒரு மாணவர் படிக்கும் பள்ளியிலும் கூட ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். மாணவர்கள் சேர்க்கை பூஜ்யமாக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 1,078ல் இருந்து 370ஆக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக