அக்.27 உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நடப்பதை ஒட்டி அக்.27ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 27ம் தேதியும், திருக்கல்யாணம் 28ம் தேதியும் நடைபெற உள்ளது.
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக கோவில் சாா்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மாவட்டம் முழுவதற்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக