இந்த வலைப்பதிவில் தேடு

கறிவேப்பிலையில் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உண்டு தெரியுமா...?

வியாழன், 1 ஆகஸ்ட், 2019




கறிவேப்பிலையில் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உண்டு தெரியுமா...?
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

கறிவேப்பிலையில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. 

🌿கறிவேப்பிலை உண்ணும்பொழுது உங்களின் எலும்புகள் மற்றும் பற்கள் வலிமை பெரும்.

🌿கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிக  மிக முக்கியம்.

 🌿தினமும் கறிவேப்பிலையை உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு நரைமுடி, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சினை ஏற்படாது. மேலும் உங்களின் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

 🌿நமது சமையலில் முக்கிய இடம்பிடிப்பது கருவேப்பிலை. ஆனால் நாம் அதன் அருமை தெரியாமல் கருவேப்பிலையை ஒதுக்குகின்றோம். இப்பொழுது ஏன் கருவேப்பிலையில் என்னென்ன ஆரோக்கிய நன்மை உண்டு என்பதை பார்ப்போம்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇

 🌿இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று இரத்த சோகை நோய் ஆகும். எனவே தினம் 10  கறிவேப்பிலையினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.

🌿கறிவேப்பிலையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களுக்கு நரை முடி, செல் அழிவு, விரைவில் வயதான தோற்றம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

🌿தினம் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையினை உண்டு வந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை  ஏற்படாமல் தடுக்கும். மேலும் இது உங்கள் இருதய ஆரோக்கியத்தினை பாதுகாக்க உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent