இந்த வலைப்பதிவில் தேடு

ஆகஸ்ட் 3ம் தேதி 3 மாவட்டத்திற்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.!!

வியாழன், 1 ஆகஸ்ட், 2019






வல்வில் ஓரி அரசு விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில், கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் சிறப்பாக விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

இதற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.


ஆடி 18 விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். விடுமுறை நாளை ஈடுசெய்ய ஆகஸ்ட் 17-ம் தேதியை பணிநாளாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



தீரன் சின்னமலை நினைவு தினம்: ஆகஸ்ட் 3-ம் தேதி சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 214 -வது  நினைவு நாள் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதோடு தமிழ் மாதமான ஆடி மாதம் கொண்டாடப்படும்  ஆடிப்பெருக்கு விழாவும் ஆகஸ்ட் 3 -ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இவ்விரண்டு நிகழ்வுகளையும் முன்னிட்டும் வரும் சனிக்கிழமை( 03.08.2019) அன்று  உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent