இந்த வலைப்பதிவில் தேடு

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சுண்டல்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

முளைப்பயறு சுண்டல்!




தேவையான பொருட்கள்:

முளைகட்டிய பயறு, பட்டாணி, கொண்டைக்கடலை, கொள்ளு – தலா கால் கப்

காய்ந்த மிளகாய் – 2

பச்சை மிளகாய் – 1

பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

தேங்காய்த் துருவல் – கால் கப்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

உளுந்து – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது:


முளைகட்டிய பயறு வகைகளை ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டு வேகவையுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்து போட்டுத் தாளியுங்கள். பிறகு காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய், இஞ்சித் துண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுக் கலந்துகொள்ளுங்கள். வேகவைத்த கடலையைத் தண்ணீர் வடித்துச் சேர்த்துக் கிளறுங்கள். கலவை சூடானதும் தேங்காய்த் துருவல் தூவி இறக்குங்கள்.


வேர்க்கடலை சுண்டல்




பொதுவாக விநாயகர் சதுர்த்திக்கு கொண்டைக்கடலை சுண்டல் தான் செய்வார்கள். ஏனெனில் விநாயகருக்கு சுண்டல் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு, சற்று வித்தியாசமாக வேர்க்கடலைக் கொண்டு சுண்டல் செய்து படைக்கலாம். 

இங்கு அந்த வேர்க்கடலை சுண்டலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: பச்சை வேர்க்கடலை - 1 கப் தேங்காய் - 1/4 கப் (துருவியது) கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்ழுன் வரமிளகாய் - 4 கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: 


முதலில் வேர்க்கடலையை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை கழுவிப் போட்டு, போதிய அளவு தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, மூடி 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும். 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வேக வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் உப்பு சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு 2 நிமிடம் பிரட்டி இறக்கினால், சூப்பரான வேர்க்கடலை சுண்டல் ரெடி!!!


கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்




என்னென்ன தேவை?
கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்,  
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், 
சர்க்கரை - கால் டீஸ்பூன், 
உப்பு - தேவைக்கேற்ப, 
தாளிக்க - காய்ந்த மிளகாய் - 2, 
கடுகு, உளுந்து, 
கறிவேப்பிலை, எண்ணெய்.



எப்படிச் செய்வது?
கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் நன்றாகக் கழுவி, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, வடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, வேக வைத்த கடலையையும் சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிரட்டி, கடைசியாக சர்க்கரை தூவி இறக்கவும். வித்தியாசமான இனிப்புச் சுவையுடன் இருக்கும் இந்தச் சுண்டல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent