இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities -20.02.20

வியாழன், 20 பிப்ரவரி, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்



திருக்குறள்

அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:385

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

விளக்கம்:


முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

பழமொழி

Little strokes fell great oaks.

 அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம் அடைய மாட்டேன்.

பொன்மொழி

நம் கண்முன் காணாத ஒன்றின் மீது ஆர்வம் கொள்ளாமல் பழகிய செயலைச் சிறப்பாக செய்தல் சிறப்பு.....

பொது அறிவு

பிப்ரவரி 20- இன்று உலக சமூக நீதி தினம்

 1. வறுமை ஒழிப்பிற்காக ஐக்கிய நாடுகள் சபையின் விருது பெற்ற முதல் இந்தியர் யார்?


நீதியரசர். எம்.பாத்திமா பீவி.

2. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலில் முதன் முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

1998

English words & meanings

Urology – study of urine; urinary tract. சிறுநீரக செயல்பாட்டை குறித்து படிக்கும் அறிவியல் துறை.

Uberous - fertile, able to give more milk, செழிப்பான, நன்கு பால் தருகின்ற

ஆரோக்ய வாழ்வு

தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறவர்களின் மூளையின் செயல்பாடும் மேம்படும் .அதாவது ஞாபகசக்தி ,ஒரு முகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.

Some important  abbreviations for students

R.N - registered nurse

R.R - rail road

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

பாம்பின் பரிதாப நிலை

குறள் :
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

விளக்கம் :
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

கதை :
ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு. கண்களைத் திறந்து பார்த்தார். உனக்கு என்ன வேண்டும்? சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன். அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் தயவு செய்து எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டது.

முனிவர், நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால், உனக்கு அடுத்த பிறவியில் உயர்ந்த பிறவி கிட்டும் என்று உபதேசித்து ஆசி கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி சென்றது. காட்டில் திரிந்த பாம்பு ஊருக்குள் வந்தது. நாம் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே. நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது.

அதனால் அந்தப் பாம்பு ஊரில் உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடியது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள். அந்த பாம்பு யாரையும் தொந்தரவு செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது. ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர். அப்போது பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. பாம்பு இரவானதும் அந்த இடத்தை விட்டு விட்டு காட்டை நோக்கி சென்றது. அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயத்துடன சென்று முனிவர் முன் நின்றது.


அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர், என்னவாயிற்று? ஏன் இப்படி காயப்பட்டு வந்திருக்கிறாய்? என்று அன்போடு வினவினார். சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாட வந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் என்று கூறிக் கண்ணீர் விட்டது.

உன்னைக் கடிக்காதே என்று தானே சொன்னேன். நீ உன் பிறவி குணத்தைக் காட்டவேண்டியது தானே? பாம்புக்குப் புரியவில்லை. அது என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என்று கேட்டது. ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள் நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன்.

உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள், சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே, அந்தப் பதிலை ஏற்றுக் கொண்ட முனிவர் பாம்புக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

சில நாட்கள் கழித்து அந்தப் பாம்பு காட்டின் எல்லையில் ஒரு பாறை அருகே படுத்திருந்தது. அப்போது சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கு வந்தனர். பாம்பு படுத்திருப்பதைப் பார்த்தனர். ஒவெனக் கூவியவாறு ஓடினர். மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர். பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது. அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமைய வேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு. அதே போல் தனக்கு தீமை ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு.

நீதி :
தன்னிடம் உள்ள வலிமை வைத்து மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது.

இன்றைய செய்திகள்

20.02.20

◆தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி யில் 170 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட தமிழ் எண்களுடன் கூடிய மைல் கற்கள் கண்டறியப் பட்டுள்ளன.

◆இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடங்கள் 200-லிருந்து 249-ஆக உயர்கிறது. ஜிப்மர் நுழைவுத் தேர்வு தற்காலிக அட்டவணையில் இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

◆நள்ளிரவில் நடந்த ராணுவ ஆள் சேர்ப்புக்கான உடல் தகுதி தேர்வு: பகலில் வெயில் கடுமையாக இருப்பதால் நடவடிக்கை.

◆ஏப்ரல் 1-ம் தேதி முதல் உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு இந்தியா மாறுகிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருள்களில் இருந்து நேரடியாக யூரோ-6 ரக எரிபொருள்களுக்கு இந்தியா மாறுகிறது.


◆நீலகிரி மாவட்டம், குன்னூர், ஓட்டுப்பட்டறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிறிஸ்டோபர் லாரன்ஸ் (32) சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

◆ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் டி-20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை இந்திய மகளிா் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Today's Headlines

🌸Milestones with Tamil numbers planted 170 years ago have been found in Chengipatti in Thanjavur district.

 🌸 Number of MBBS seats in Jipmer Pondicherry Medical College is increased from 200 to 249. It is one of the best medical college of India

🌸 Due to severe heat in the day time the selection process of Military Services took place in the midnight

 🌸India is switching to the world's cleanest petrol and diesel market from April 1.  This means India is switching directly from Euro-4 fuels to Euro-6 fuels.

 🌸Christopher Lawrence (32), a youth from Nilgiri district, Coonoor, has been selected for the International Cricket Coaches' Examination.

 🌸The Indian women's team defeated West Indies team by 2 wickets in the T20 World Cup in Brisbane, Australia.

Prepared by
Covai women ICT_போதிமரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent