இந்த வலைப்பதிவில் தேடு

5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய், 28 மார்ச், 2023

 




தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியா மீது வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு - மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகபட்சம் 34-35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent