AI மூலமாக பயனர்களுடன் உரையாடும்படியான புதிய அப்டேட் வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்:
பயனர்களுக்கு கூடுதல் வசதியினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது.
அந்த வகையில், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் காலை ம்யூட் செய்யும் வசதி, ஏகப்பட்ட தனித்துவமான எமோஜிகள், ஒரே அக்கௌன்ட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை லாகின் செய்யும் வசதி என ஏகப்பட்ட அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், AI முறையில் சேட் செய்யும்படியான வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, நீங்கள் விரும்பும் பட்சத்தில் AI வசதியுடன் உங்களால் பயனர்களுடன் உரையாட முடியும். பீட்டா பயனர்கள் நேரடியாகவே இந்த அப்டேட்டை பெறலாம். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளில் AI வசதி அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து தற்போது வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக