இந்த வலைப்பதிவில் தேடு

பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்

திங்கள், 13 ஜனவரி, 2025

 



ஜனவரி 13-ஆம் தேதி போகிப் பண்டிகை துவங்கி, ஜனவரி 16-ம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் வருகின்றன. மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது இந்திர விழா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.


ஜனவரி 13-ஆம் தேதி போகிப் பண்டிகை துவங்கி, ஜனவரி 16-ம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் வருகின்றன. மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது இந்திர விழா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.


பொங்கல் வைக்க நல்ல நேரம்:


ஜனவரி 14-ஆம் தேதி (தை மாதம் 01-ஆம் தேதி)


பொங்கல் வைக்க நல்ல நேரம்


காலை 6.42 மணிக்கு சூரிய உதயம். நல்லநேரம் காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் இருந்தாலும், மகர ராசியில் சூரிய பகவான் பகல் 11.58 மணிக்குத்தான் பிரவேசிக்கிறார். எனவே மகர சங்கராந்திப் பொங்கல் என்ற அடிப்படையில், பொங்கல் வைக்க பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் நல்ல நேரம் உள்ளது. அந்த நேரத்தில் குரு ஓரையும் வருவதால் பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.


அதேசமயம், சூரிய பொங்கலாக வைப்பதாக இருந்தால் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வைத்துவிடலாம். சூரிய உதயத்தின்போது அந்த பொங்கலை நைவேத்யம் செய்துவிடலாம். அந்த நேரத்தில் வைப்பது கஷ்டம் என்றால் காலை 6 மணி முதல் 8.50 மணிக்குள் பொங்கல் வைத்து படையல் போட்டுவிடலாம். இன்னொரு நல்ல நேரம் 10.35 மணி முதல் 12 மணிக்குள்ளாகவும் பொங்கல் வைத்து படைக்கலாம்.


மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரம் 

மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் பொங்கல் வைக்க உகந்த நேரமாகும். முதலில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாடுகளின் கழுத்தில் பூமாலையும், கரும்பு மாலையும் கட்டி அலங்கரித்து, பின் பொங்கல் வைத்து வழிபடலாம். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். அதில் சிறிதளவை குடும்ப உறுப்பினர்களும் சாப்பிட வேண்டும். அதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம்.


தைப் பொங்கல் செழிப்பைக் குறிக்கிறது. மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புது ஆடைகள் அணிந்து சூரிய பகவானை வழிபடுவார்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தைப்பொங்கல் மிக முக்கியமான நாள்.


கிராமப்புறங்களில் மக்கள் இந்த தைப்பொங்கலைத் திறந்த வெளியில் அல்லது தங்கள் வீட்டின் முற்றத்தில் கொண்டாடுகிறார்கள். இதுதான் பாரம்பரிய முறையாகும். மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பாத்திரத்தில் புதிய மஞ்சள் இலைகள் கட்டிய பாத்திரத்தில் பொங்கலைச் செய்வார்கள்.


அந்தப் பொங்கல் பொங்கி வந்ததும், மக்கள் "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சியாகவும் சத்தமுடனும் கூறுவார்கள். தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்று அர்த்தமாகும்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent