கோவை நல்லாம்பாளையம் பகுதியில் சாலையை, கடக்க முயன்ற இளைஞரை தாக்கிய போலீஸ் தலைமை காவலரை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனது நிறுவனத்திற்கான பொருட்களை வாங்க மோகன்ராஜ் நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து சாலையை கடக்க முயன்ற போது செல்போனை பார்த்தவாறு கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கவுண்டம்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் ஜெயபிரகாஷ் திடீரென மோகன்ராஜ் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதில் மோகன்ராஜ் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
மேலும் இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரல் ஆனது. இதையடுத்து இளைஞரை தாக்கிய தலைமை காவலர் ஜெயபிரகாசை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக