இந்த வலைப்பதிவில் தேடு

நாளை (ஜனவரி 15) - இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவு

செவ்வாய், 14 ஜனவரி, 2025

 

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி 15) சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 15.01.2025 புதன்கிழமை அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன. 


எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent