கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை பகுதியில் ஏகலைவா அரசு மலைவாழ்வு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (23.06.2026) சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை போலீசார் பள்ளியில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அப்போது பள்ளி மாணவிகளுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் எங்களைத்த் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்கள்
அதன் அடிப்படையில் அரசு ஏகலைவா உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாரை தனியாகச் சந்தித்து எங்களுக்கு இந்த பள்ளியில் பணிபுரியும் கணினி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொடர்பான குட் டச், பேட் டச் (good touch bad touch) என்று கூறி தொல்லை கொடுத்து வருவதாகப் புகாரைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது,
இதனை அடுத்து மாணவிகளிடம் தொடர்ந்து சிங்கப்பெண் சிறப்பு படை போலிசார் விசாரணை செய்ததில் அதே பள்ளியில் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வரும் சுரேஷ்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது,
அதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர் சுரேஷ்குமார் என்பவரை கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் சிங்கப்பெண் அதிரடிப் படையினர் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக