இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் - CEO அதிரடி நடவடிக்கை

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

ராணிப்பேட்டை மாவட் டம் திமிரி அடுத்த காவனூர் கிராமத்தில் சிஎஸ்ஐ வேலூர் பேராயம் எம்டி அரசு நிதி உதவி தொடக் கப்பள்ளி இயங்கி வரு கிறது. 

இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற் றும் ஆசிரியை எலிசபெத் ராணி பணியாற்றி வரு கின்றனர். இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். கடந்த 29ம் தேதி பள்ளியில் ஆசிரியை 3ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு வீட் டுப்பாடம் எழுதி வருமாறு கூறியுள்ளார்.

மறுநாள் வகுப்பறைக்கு வந்த ஆசிரியை மாண வர்களிடம் கொடுத்த வீட்டுப்பாட நோட்டை கேட்டுள்ளார். அப்போது ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவன் வீட்டுப்பா டத்தை எழுதாமல் வந்தார் களாம். இதனால் பள்ளி ஆசிரியை எலிசபெத் ராணி வீட்டுப்பாடத்தை எழுதாமல் வந்த மாணவி, மாணவனை பிரம்பால் அடித்ததாக தெரிகிறது. இதில் இருவருக்கும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு வீக்கம் அடைந்து ரத்தம் கட்டியதாம்.

நேற்று முன்தினம் மாலை மாணவர்கள் பள்ளி முடித்து வீட்டிற்கு சென்றனர். அங்கு மகள், மகனின் கை, கால்கள் வீக்கமடைந்து ரத்தம் கட்டியுள்ளதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, ஆசிரியை அடித்தது தெரியவந்தது. இதையடுத்து காவனூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில் இதை கண்டித்து நேற்று காலை காந்தியார் தெரு, அம்பேத் கர் தெரு மக்கள் வீட்டுப் பாடம் எழுதாத மாணவ, மாணவியை அடித்த ஆசி ரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்க ளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை திடீரென முற்றுகையிட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு வந்த திமிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் மோகனா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியா, சப் இன்ஸ் பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று பெற்றோர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா நடந்த விபரங்களை கேட் டறிந்தார். அப்போது மாணவி, மாணவனை ஆசிரியை பிரம்பால் கடு மையாக அடித்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆசி ரியை எலிசபெத் ராணி மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுத்து உடனடி யாக சஸ்பெண்ட் ஆர் டரை சிஇஓ வழங்கினார்.

மேலும் மாணவர்க ளின் பெற்றோர் திமிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பே லோகேஷ் வழக்குப்பதிவு ரில் சப் இன்ஸ்பெக்டர் செய்துவிசாரணை நடத்தி அப்பகுதியில் பெரும் வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent