இந்த வலைப்பதிவில் தேடு

கல்வித்துறையில் அதிகரிக்கும் 'பொறுப்பு' அதிகாரிகள் கூடுதல் பணிச்சுமையால் விரக்தி

திங்கள், 7 செப்டம்பர், 2026

கல்வித் துறையில் இயக்குநர் முதல் தலைமையாசிரியர் வரை ஆயிரக்கணக்கான பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு கவனிக்கும் அலுவலர்கள், ஆசிரியர்கள் பணிச்சுமையால் தவிக்கின்றனர்.


இத்துறை இயக்குநர் பணியிடம் 40 நாட்களுக்கும் மேல் காலியாக உள்ளது. எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குநர் லதா கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். 32 மாவட்ட கல்வி அலுவலகங்களில் 6 மாதங்களாக டி.இ.ஓ.,க்கள் இல்லை. இங்கே சீனியர் தலைமையாசிரியர்கள் கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர்.


டி.இ.ஓ., பதவி உயர்வு பட்டியல் தி.மு.க., ஆட்சியிலேயே தயாராக இருந்தும் தற்போது வரை கிடப்பில் உள்ளது.


இதுதவிர 60க்கும் மேற்பட்ட கல்வி ஒன்றியங்களில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் (பி.இ.ஓ.,) பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. இதிலும் சீனியர் தலைமையாசிரியரே கூடுதல் பொறுப்பு வகிக்கின்ற னர்.


வழக்குகள் காரணமாக தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் 2 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. கற்றல் கற்பித்தல் பணியை பாதிக்கும் இவ்விஷயத்தை கல்வி அதிகாரிகள், துறை அமைச்சர் அலட்சியமாக கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தலைமையாசிரியர்கள் கூறியதாவது:


ரெகுலர் இயக்குநரை போல் கூடுதல் பொறுப்பு வகிப்பவரின் உத்தரவை அலுவலர்கள் பின்பற்றுவதில்லை என புகைச்சல் எழுந்துள்ளது. டி.இ.ஓ., பி.இ.ஓ., காலிப் பணியிடங்களால் மாவட்ட அளவில் நிர்வாகப் பணிகள் முடங்கியுள்ளன. இரட்டை பணிச்சுமையால் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.


புதிய இயக்குநரை நியமித்து, டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வை உடன் வெளியிடவும், கொள்கை முடிவு எடுத்து தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent