மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்து மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டோர் விபரம் வெளியிடப்பட வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது: செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
சில ஆண்டுகளாக அரசியல் சிபாரிசு அடிப்படையில் பலர் விருதை பெற்றதாக சர்ச்சை எழுந்தது. மாவட்ட நேர்காணலில் பங்கேற்காதவர் கூட சிபாரிசு மூலம் நேரடியாக மாநில விருது பட்டியலில் இடம் பெறும் சூழல் இருந்தது.
த.வெ.க., ஆட்சியில் இவ்விருது தேர்வு வெளிப்படையாக நடக்கும் என பல ஆசிரியர்கள் இந்தாண்டு ஆர்வமாக விண்ணப்பித்தனர். ஆனால் இந்தாண்டும் அரசியல் குறுக்கீடு உள்ளது.
மாவட்ட அளவில் நேர்காணல் நடத்தி 1:2 என்ற அடிப்படையில் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் தயாரித்து இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. விருது பட்டியல் வெளியிடும் முன், மாவட்ட அளவில் தேர்வானோர் பட்டியல் விபரத்தை அந்தந்த சி.இ.ஓ., அலுவலக தகவல் பலகையில் வெளியிட வேண்டும். அரசியல் சிபாரிசால் விருது பெறும் நடைமுறையை தடுக்க இவ்வாறு நடவடிக்கை எடுத்தால் ஆசிரியர்கள் வரவேற்பர். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக