காலாண்டு தேர்வில் ஒன்பது, பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழக செய்தி பிரிவு மாநில செயலாளர் நல்லதம்பி தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:
காலாண்டு தேர்வு அட்டவணையில் பிற வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ச்சியாக தேர்வுகள் இல்லாமல் இடைவெளி விட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் தேர்வு செப்.,23, மற்றும் சமூக வரலாறு தேர்வு செப்.,24ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறை செப்.,26 ல் துவங்க உள்ளது. அதனால் சமூக வரலாறு பாடத்தேர்வை வேலை நாளான செப்.,25 ல் நடத்த வேண்டும். இதனால் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வர் என்றார்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக