சேலம் மாவட்டம்
உலகப் புகழ்பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் வைபவத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 8, 2026 (சனிக்கிழமை) அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் முழு வேலை நாளாகச் செயல்படும்.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மக்களின் முக்கிய ஆன்மீக அடையாளமான உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி பள்ளி அல்லது கல்லூரிகளில் அரசுத் தேர்வுகள் ஏதேனும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தால், தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக