இந்த வலைப்பதிவில் தேடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - ஆசிரியர்கள் திணறல்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026




சுய கணக்கெடுப்பு பதிவு ( Self Enumeration) செய்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதால் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் சிரமம் அடைகின்றனர்.


இந்தியா முழுவதும் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பு துவங்குவதற்கு முன் ஒவ்வொருவரையும் இணையதளம் மூலம் சுய கணக்கெடுப்பு பதிவு செய்ய அரசு வசதி செய்தது. சுய பதிவு செய்தால் ஐ.டி. எண் கிடைக்கும். கணக்கெடுக்க வரும் ஆசிரியரிடம் அந்த எண்ணை தெரிவித்தால் பதிவு செய்வார்கள்.


ஆனால் சுயவிபர கணக்கெடுப்பு பதிவை ஒரு சிலர் மட்டுமே செய்துள்ளனர். தற்போது கணக்கெடுக்க ஆசிரியர்கள் வீடு வீடாக செல்லும் போது தான், சுய விபர கணக்கெடுப்பு பதிவு ஒரு சதவீதம் பேர்கள் கூட மேற்கொள்ளவில்லை என்பது தெரிய வருகிறது. ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் இப் பணிமேற்கொள்கின்றனர். பல காரணங்களால் ஒரு நாளைக்கு 10 வீடுகள் கூட விபரம் சேகரிக்க முடியவில்லை. இதில் கேள்விகள் கேட்கும் போது சிலர் இதெல்லாம் ஏன் கேட்கிறீர்கள் என கோபப்படுகின்றனர். ஒரு ஆசிரியருக்கு 250 வீடுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு ஆக 1ல் துவங்கி ஆக, 31 க்குள் முடிக்க வேண்டும்.


ஆசிரியர் கூறுகையில் , ‘மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் இப்பணி செய்து வருகிறோம். ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒரு பிரிவினரை காலையிலும் கணக்கெடுக்க அனுப்புகின்றனர். பள்ளி முடிந்தவுடன் அனைவரும் ஈடுபடுகிறோம். சுய விபர கணக்கெடுப்பு செய்திருந்தால் எளிதாக இருந்திருக்கும். ஆனால் மிக மிக குறைவான எண்ணிக்கையில் தான் செய்துள்ளனர். எனவே இப்பணி சவாலானதாகவே உள்ளது,’ என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent