செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியரை மாற்றக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தலைமையாசிரியர் பொறுப்பேற்ற பிறகு, பள்ளியில் பயின்ற 430-க்கும் மேற்பட்ட மாணவர்களில் தற்போது 130 பேர் மட்டுமே படித்து வருகின்றனர் .
முறையாகப் பாடம் நடத்துவதில்லை என்றும், மெத்தனமான போக்குடன் செயல்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாதிப் பெயரைக் கூறி மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது
இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தலைமையாசிரியர் இந்திராணி என்பவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக