இந்த வலைப்பதிவில் தேடு

விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பலி

செவ்வாய், 7 ஜூலை, 2026




ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே லாரி மீது டூவீலர் மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பலியானார்.


திருவாடானை அருகே கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் வன்மீகநாதன் 54. இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வசித்தார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் முதுகலை ஆசிரியராக பணியாற்றினார். நேற்று வன்மீகநாதன் தேவகோட்டையிலிருந்து சின்னக் கீரமங்கலம் நோக்கி டூவீலரில் சென்றார்.


கல்துாண்களை ஏற்றிக்கொண்டு இவருக்கு முன் லாரி சென்றது. லாரி டிரைவர் திடீரென பிரேக் அடித்ததால், பின்னால் சென்ற வன்மீகநாதன் டூவீலரை கட்டுப்படுத்த முடியாமல் மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் மாமுன்டிமடையைச் சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ்குமாரை 38, திருவாடானை போலீசார் கை து செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent