இந்த வலைப்பதிவில் தேடு

தொடர்ந்து ஏற்றம் காணும் தங்கம் விலை - இன்றய விலை நிலவரம்

செவ்வாய், 14 ஜனவரி, 2025

 



இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 58,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. 


கடந்த வெள்ளி கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 58,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.58,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.  


இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 58,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent