அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் படுகாயமடைந்த மதுரையை சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியின்போது காளை மார்பில் குத்தியதில் நவீன், படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்த போலீசார், அவரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன் உயிரிழந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக