இந்த வலைப்பதிவில் தேடு

வங்கிக் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் செயலற்றுப் போகலாம்!

திங்கள், 10 மார்ச், 2025

 




ஒருவர் வங்கிக் கணக்கு வைத்திருந்து, அதில் எந்தப் பணப்பரிமாற்றமும் செய்யாமல் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்டால், அதனை செயலற்ற வங்கிக் கணக்காக மாற்றிவிடும் நடைமுறை கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கியிருக்கிறது.


வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தங்களது வங்கிகளில், பயன்பாட்டில் இல்லாமல், எந்தப் பணப்பரிவர்த்தனையும் இல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் வங்கிக் கணக்குகளை செயலற்ற வங்கிக் கணக்குகளாக மாற்றிவிடும்படி அறிவித்திருக்கிறது.


ஒருவேளை, இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றம் இல்லாமல், எந்தத் தொகையும் வைப்பு வைக்கப்படாமல் இருந்தால் அது மூடப்படலாம்.


அப்படி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஏதேனும் வங்கிக் கணக்கை பயன்படுத்தாமல் வைத்திருந்தாலும், பயனாளி ஒருவர் உடனடியாக வங்கிக்குக் சென்று அந்த வங்கிக் கணக்கில் ஒரு சிறிய தொகையை வைப்பு வைத்தால் கூட, அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை உங்கள் வங்கிக் கணக்கு உயிரோடு இருக்கும்.


அதுபோல, வங்கிக் கணக்கில் பூஜ்ய இருப்புத் தொகை இருந்தாலும், அது மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதால் அதனையும் செயலற்றதாக மாற்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.


எனவே, ஒரு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர், அது செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றால், அந்த வங்கியின் குறைந்தபட்ச பண இருப்புத் தொகையை விடவும் கூடுதலாக ஒரு ரூ.500ஐ செலுத்தி இருப்பில் வைப்பது நல்லது.


ஒருவேளை, ஒரு வங்கிக் கணக்கு செயலற்றதாக மாற்றப்பட்டுவிட்டால், நேராக வங்கிக்குச் சென்று கேஒய்சி விண்ணப்பம் கொடுத்து அதனை செயல்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.


முதல் ஓராண்டு வரை செயல்பாடு இல்லாமல் இருக்கும் வங்கிக் கணக்குகள் செயல்பாடற்ற வங்கிக் கணக்காக மாற்றிவைக்கப்படும். பயனாளர் வந்து கேட்கும்பட்சத்தில், அதில் ஒரு பணப்பரிமாற்றம் செய்து செயல்பாட்டுக்குக் கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent