அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கான திருமணத்திற்கான முன் பணத்தை தமிழ்நாடு அரசு பல மடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு திருமண முன் பணம்
திருமணத்திற்கான முன் பணமாக பெண் ஊழியர்களுக்கு 10000 ரூபாயும், ஆண் ஊழியர்களுக்கு 6000 ரூபாயும் இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இதை பலமடங்காக உயர்த்தி அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நிதி நிலைமையை காரணம் காட்டி திமுக அரசு தங்கள் கோரிக்கைகளை கிடப்பில் போட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இருந்த போதும் திமுக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110 கீழ் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளுக்கான அரசாணைகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்
அன்றைய தினம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசின் நிதி நிலை ஏற்பட்ட ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டார். மத்திய அரசு ஊழியர்களைப் போலவே மாநில அரசு பணியாளர்களுக்கும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அகவிலைப்படியை இரண்டு விழுக்காடு உயர்த்தி அறிவித்தார்.
அதே போல் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களுடைய குடும்பத்தோடு பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பண்டிகை கால முன்பணத்தை 10,000 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக