இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

 




கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். 


அங்கு தமிழ் ஆசிரியராக சுரேஷ்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த மார்ச் மாதம் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த ஒரு மாணவிக்கு ஆசிரியர் சுரேஷ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி, பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.


அந்த புகாரின் பேரில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பாலியல் புகாருக்கு ஆளான சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent