:திண்டுக்கல் அருகே ஆசிரியர் திட்டியதற்காக 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து மாணவரை தற்கொலைக்கு துாண்டிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் எஸ்.பி., யிடம் புகார் கொடுத்தனர்.
திண்டுக்கல் வெள்ளோடு அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த மரியஅருள் சந்தியாகு - ஆரோக்கியமேரி 2வது மகன் சாம்ஜஸ்பர். வக்கம்பட்டி தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். ஆசிரியர்கள் திட்டியதால் ஜூலை 14 மாலை தற்கொலை செய்து கொண்டார்.
அம்பாத்துரை போலீசார் விசாரித்துவந்த நிலையில், காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் உறவினர்கள் 50க்கு மேற்பட்டோர் எஸ்.பி., பிரதீப்பை சந்தித்து புகார் அளித்தனர். அவர்கள் கூறியதாவது :எங்களுக்கு தாமதமாகவே உண்மை தெரியவந்தது.
பள்ளிக்குள் அலைபேசி பயன்படுத்தியது தொடர்பாக நடந்த விசாரணையில் எனது மகனை ஆசிரியர்கள் அடித்துள்ளனர். சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துள்ளார். ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்திடம் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்வதாக எஸ்.பி., உறுதியளித்திருக்கிறார் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக