இந்த வலைப்பதிவில் தேடு

Egg Half Boil - சாப்பிடலாமா?

ஞாயிறு, 27 ஜூலை, 2025

 



முட்டையை அரை வேக்காடாக அதாவது ஆப் பாயிலில் சாப்பிடுவது ,அதன் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்க சிறந்த வழி .ஏனெனில் அதன் மஞ்சள் கரு நமக்கு முழுமையாக கிடைக்கும் .மேலும்  ஆப் பாயில் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்


1.சில முட்டையில் சால்மோனெல்லா என்ற நச்சு பாக்டீரியா இருக்கும் .இந்த நச்சுவால் உடல் நலம் பாதிப்படையாமல் இருக்க முட்டையை அரை வேக்காட்டுடன் சமைத்துக் கொள்வது நல்லது.


2.முட்டையை ஆப் பாயிலில்  சிறிது நேரத்திற்கு வேக வைத்தாலே போதும், நச்சு பாக்டீரியாக்கள் அழிந்து விடும்.


3. சிலர் பொரித்த முட்டை சாப்பிடுவர் .இது போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடும் பொழுது அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே.


4.அரை வேக்காடு முட்டை கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்ற அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை அழிக்காமல் பார்த்துக் கொள்ளும். 


5.அரை வேக்காடு முட்டையில் வெள்ளை கரு நன்றாக வெந்திருக்கும். ஆனால் மஞ்சள் கருவோ அரை வேக்காட்டுடன் வழிந்து ஓடுகிற நிலையில் இருக்கும்.


6.வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent