இந்த வலைப்பதிவில் தேடு

கர்நாடகா - ஆசிரியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்

சனி, 30 ஆகஸ்ட், 2025

 





கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சகாபுராவில் அரசு உண்டு, உறைவிட பள்ளிக்கூடம் உள்ளது. அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு கடந்த 27-ந் தேதி கழிவறையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் மாணவி மற்றும் குழந்தையை பள்ளிக்கூட நிர்வாகிகள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவி, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இதையடுத்து, யாதகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உண்டு, உறைவிட பள்ளிக்கு சென்று மற்ற மாணவிகள், ஆசிரியர்களிடமும், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியிடமும் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாணவியை ஒரு வாலிபர் பலாத்காரம் செய்திருந்ததும், அதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்து பள்ளிக்கூட கழிவறையில் குழந்தை பெற்றதும் தெரியவந்தது.



அதே நேரத்தில் மாணவி கர்ப்பமாக இருப்பது பற்றிக்கூட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியாமல் இருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து, உண்டு, உறைவிட பள்ளியில் பணியாற்றும் 4 ஆசிரியர்களை மாவட்ட கல்வித்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


அதே நேரத்தில் மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீதும் சகாபுரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது. அந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent