ஆசிரியர் பிரம்பால் தாக்கியதாக கையில் காயங்களுடன் பிளஸ் 2 மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நடராஜபுரத்தை சேர்ந்த சின்னபாண்டி மகன் செந்தில்வேல் மூவேந்தர், 17. அப்பகுதியில் உள்ள லட்சுமி சீனிவாசா வித்யாலயா மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் சங்கிலிபாண்டி, 35, இரண்டு வகுப்புகளில் உள்ள மாணவர்களை ஒன்றாக அமர செய்து பாடம் எடுத்துள்ளார்.
அப்போது, மாணவர் செந்தில்வேல் மூவேந்தர் கடைசி பெஞ்சில் இருந்ததால் அவரை முன்பகுதிக்கு வருமாறு சங்கிலிபாண்டி கூறியுள்ளார். அவர் முன்னால் வராததால் மூங்கில் பிரம்பால் செந்தில்வேல் மூவேந்தரை, சங்கிலிபாண்டி அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த செந்தில்வேல் மூவேந்தர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சங்கிலிபாண்டி மீது அவர் கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் அளித்தார். சங்கிலி பாண்டி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக