சின்னசேலம் அருகே உள்ள வாசுதேவனுார் கிராமத்தை சேர்ந்த சண்முகம், சின்னசேலம் அரசு உயர்நிலைப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார்.
இவர் அதே பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது.
கள்ளக்குறிச்சி மகளிர் போலீசார் நேற்று முன்தினம் சண்முகம் மீது வழக்குபதிந்தனர். தலைமறைவான சண்முகத்தை ‘சஸ்பெண்ட்’ செய்து சி.இ.ஓ கார்த்திகா நேற்று உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக