இந்த வலைப்பதிவில் தேடு

பட்​ட​தாரி ஆசிரிய​ராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வி தகுதியை சரிபார்க்க உத்தரவு

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

 



பட்​ட​தாரி ஆசிரிய​ராக பதவி உயர்வு பெறும் அமைச்​சுப் பணி​யாளர்​களின் கல்​வித் தகு​தியை சரி​பார்க்க பள்​ளிக்​கல்வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யில் உள்ள 2 சதவீத காலி​யிடங்​கள் அத்​துறை​யின் அமைச்​சுப் பணி​யாளர்​களின் பதவி உயர்வு மூல​மாக நிரப்​பப்​பட்டு வரு​கிறது.


அதன்​படி நடப்​பாண்டு அமைச்​சுப்பணி​யாளர்​களுக்கு பட்​ட​தாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியருக்​கான பதவி உயர்வு கலந்​தாய்வு நீதிமன்ற தீர்ப்​பின் அடிப்​படை​யில் வழங்​கப்பட வேண்​டுமென உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. அதன்​படி டெட் தேர்ச்சி பெற்ற 151 அமைச்​சுப் பணி​யாளர்​களுக்கு கலந்​தாய்வு மூல​மாக பட்​ட​தாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்​கப்​பட்​டது. அவர்​களை உடனடி​யாக பணி விடு​விப்பு செய்​யு​மாறு பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.


அவ்​வாறு பணி விடு​விப்பு செய்​யும்​போது பட்​ட​தாரி ஆசிரியர் பதவிக்​குரிய கல்​வித் தகு​தியை அவர்​கள் பெற்​றுள்​ளனரா என்​பதை உறு​தி​செய்ய வேண்​டும். பிற மாநில ஆவணங்​களாக இருந்​தால் மதிப்​பீடு செய்​யப்​பட வேண்​டும். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலு​வை​யில் இல்லை என்​ப​தை​ உறுதி செய்ய வேண்​டுமென மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent