இந்த வலைப்பதிவில் தேடு

கனவுகளை வசமாக்கும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ - பள்ளிக்கல்வித் துறை செயலர் உறுதி

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

 




அரசு மாதிரிப் பள்​ளி​களைத் தொடர்ந்​து, அடுத்து வரும் ‘வெற்​றிப் பள்​ளி​கள் திட்​டம்’ ஏழை மாணவர்​களின் உயர்​கல்விக்​கான பெரும் கனவு​களை வசமாக்​கும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் தெரி​வித்தார். தமிழகத்​தில் அரசுப் பள்ளி மாணவர்​களின் கற்​பித்​தலை மேம்​படுத்​து​வதற்​காக மாதிரிப் பள்ளி திட்​டம் 2021-22-ம் கல்​வி​யாண்​டில் தொடங்கப்பட்​டது.


மாநிலம் முழு​வதும் மாவட்​டத்​துக்கு தலா ஒன்று வீதம் 38 மாதிரிப் பள்​ளி​கள் தற்​போது செயல்​பட்டு வரு​கின்​றன. இந்​தப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்​வகம், ஸ்மார்ட் வகுப்​பறைகள், சிசிடிவி கேம​ரா, முழு​மை​யான உப கரணங்​களு​டன் கூடிய அறி​வியல் ஆய்​வகம், டிஜிட்​டல் கரும்​பல​கை, விளை​யாட்டு மைதானம், நுண்​கலைத்​திறன் பயிற்​சி, உண்டு உறை​விட வசதி​கள் என மாணவர்​களுக்​குத் தேவை​யான அனைத்து கட்​டமைப்​பு​களும் ஒரே வளாகத்​தில் ஏற்​படுத்​தப்​பட்​டிருக்​கும்.


இதற்​கிடையே, இந்​தப் பள்​ளி​களில் படித்த மாணவர்​கள் ஐஐடி போன்ற தேசிய அளவி​லான முன்​னணி உயர்​கல்வி நிறு​வனங்களில் இடம் பெறு​வதற்​கான வாய்ப்​பு​கள் உறு​திப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.


அதன்​படி கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் 1,878 மாணவர்​கள் முதன்மை உயர்​கல்வி நிறு​வனங்​களில் இடம் பெற்​றுள்​ளனர். இதற்கு கிடைத்த வரவேற்​பைத் தொடர்ந்​து, இந்​தத் திட்​டத்தை ‘வெற்​றிப் பள்​ளி​கள்’ எனும் பெயரில் வட்​டார அளவில் கொண்டு செல்ல வேண்​டுமென மாநிலக் கல்விக் கொள்​கை​யில் பரிந்​துரைக்​கப்​பட்​டது.


அதன்​படி தமிழகம் முழு​வதும் உள்ள 414 வட்​டாரங்​களில் 500 வெற்​றிப் பள்​ளி​கள் உரு​வாக்​கப்​படும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வித்​தது. இதைத் தொடர்ந்து ஒவ்​வொரு வட்​டாரத்​தி​லும் ஒரு சிறந்த அரசு மேல்​நிலைப் பள்ளி தேர்வு செய்​யப்​பட்​டு, அது வெற்றிப் பள்​ளி​யாகதரம் உயர்த்​தப்பட உள்​ளன. மாதிரி பள்​ளி​களில் உள்​ளதைப் போன்ற நவீன வசதி​கள் அங்கு ஏற்படுத்தப்படும். உண்​டு, உறை​விட வசதி​கள் மட்​டும் இடம்​பெறாது. அந்த பள்​ளி​யில் வாரந்​தோறும் உயர்​கல்வி வழி​காட்டி வகுப்​பு​கள் நடை​பெறும்.


நீட்,ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்​வு​களுக்​கான பயிற்​சி வழங்​கப்படும். இந்த பயிற்சி வகுப்​பு​களில் அந்த வட்​டாரத்​தில் உள்ள அனைத்து பிளஸ் 2 மாணவர்​களும் தங்​கள் சுய​விருப்​பத்​தின்​படி இணைந்து பயன்​பெறலாம். இந்த வெற்​றிப் பள்​ளி​கள் மூல​மாக சுமார் 50 ஆயிரம் மாணவர்​கள் பயன்​பெறு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.


இதன்​மூலம் முதன்மை உயர்​கல்வி நிறு​வனங்​களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்​களின் எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கும். இதற்​காக பள்​ளிக்​கல்​வித் துறை ரூ.111.37 கோடி நிதி ஒதுக்​கி​யுள்​ளது. அதில் முதல்​கட்​ட​மாக, இந்​தாண்டு 236 வட்​டாரங்​களில் வெற்​றிப் பள்​ளி​கள் தொடங்​கும் வித​மாக ரூ.54.73 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.


அடுத்த கல்​வி​யாண்​டில் எஞ்​சிய 178 வட்​டாரங்​களைச் சேர்த்து மொத்​தம் 500 வெற்​றிப் பள்​ளி​கள் தொடங்​கப்​படும் என்று பள்​ளிக் கல்​வித் துறை தெரிவித்துள்​ளது. அதே​நேரம் மாதிரிப் பள்​ளி​கள் திட்​டம் சமமற்ற கல்வி முறையை ஊக்​கு​விப்​ப​தாக என கல்வியாளர்​கள் சிலர் குற்​றம்​சாட்டுகின்​றனர்.


இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோக​னிடம் கேட்​ட​போது, “அரசுப் பள்​ளி​களில் பெரும்​பாலும் பொருளா​தார ரீதி​யாக பின்​தங்​கிய மாணவர்​களே அதி​கம் படிக்​கின்​றனர். அவர்​களின் ஏழ்​மை​யானது, கனவு​களுக்கு தடை​யாக இருக்​கக் கூடாது. சாமானியனுக்​கும் முன்​னணி உயர்​கல்வி நிறு​வனங்​களில் பயில்​வதற்​கான வாய்ப்​பு​களை எந்த தடை​யின்றி வழங்​கு​வதற்​காகவே இந்த மாதிரிப் பள்​ளி​கள் திட்​டம் முன்​னெடுக்​கப்​பட்​டன.


அதை பரவலாக்​கும் வித​மாக ஒவ்​வொரு வட்​டாரத்​தி​லும் வெற்றி பள்​ளி​கள் நிறு​வப்​பட்​டு, மாதிரி பள்​ளி​களுக்கு இணையானகட்டமைப்பு வசதி​கள் மற்​றும் கல்​வித்தரம் மேம்​படுத்​தப்பட உள்​ளது. திறமை மற்​றும் விருப்​பத்​தின் அடிப்​படை​யில் மாணவர்​கள் சேர்க்கை பெறு​வார்​கள்.


மேலும், அரு​கிலுள்ள பள்​ளி​களுக்கு வழி​காட்​டு​தலை​யும் வழங்​கி, ஒட்​டுமொத்த தரத்தை உயர்த்த வழி​வகுக்​கும். படிப்​படி​யாக அனைத்து பள்​ளி​களை​யும் வெற்​றிப் பள்​ளி​களாக மாற்​று​வதற்​கான இலக்கு நிர்ணயிக்கப்படும். எனவே, இது சமமற்ற கல்வி முறையல்​ல; ஏழை மாணவர்​களின்​ பெரும்​ கனவு​களை வசமாக்​கும்​ ​முயற்​சி” என்றார்​.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent