'எமிஸ்' பதிவேற்ற பணிகள் மீண்டும் அதிகரித்துள்ளதால் ஆசிரியர்கள் எரிச்சலடைந்துள்ளனர். 'எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர்' என்ற, கல்வி அமைச்சர் மகேஷ் உத்தரவு அவ்வளவு தானா என கேள்வி எழுந்துள்ளது.
பள்ளி கல்வி துறையில் பள்ளிகள், ஆசிரியர், மாணவர்களின் அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்யும் வகையில் 'எமிஸ் போர்ட்டல்' நடைமுறையில் உள்ளது.
இதில் தினமும் மாணவர்கள் வருகை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட விபரங்களை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஓராண்டுக்கு முன், நெட் ஒர்க் பிரச்னையால், பதிவேற்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டு ஆசி ரியர்களின் கற்பித்தல் பணி கடுமையாக பாதித்தது.
இது தொடர்பாக ஆசிரியர்களிடையே அதிகரித்த அதிருப்தி காரணமாக, 'எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர்' என, கல்வி அமைச்சர் மகேஷ் அப்போது அறிவித்தார். அதன்படி அப்பணிகளில் சில குறைக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது கூடுதலாக, மாணவர்கள் உடல் சார்ந்த, நோய் அறிகுறி குறித்த தகவல்கள் உட்பட பல்வேறு பதிவுகளை மேற்கொள்ள அதிகாரிகள் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்.
இதனால், மீண்டும் எமிஸ் பணிகள் அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக