இந்த வலைப்பதிவில் தேடு

20.08.2025 (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட நிர்வாகம்

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

 



மகான் ஸ்ரீநாராயண குரு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 20.08.2025 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.


(2) 20.08.2025 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2025 செப்டம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (13.09.2025) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி மேற்படி மூன்று வட்டங்களில் உள்ளூர் விடுமுறையினை துய்க்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.


(3 மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -20.08.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு. தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent