இந்த வலைப்பதிவில் தேடு

தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய SSA கல்வி நிதியை நிறுத்திய மத்திய அரசு - TNPSC தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

 




TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான முதல் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழ்நாட்டிற்கு சமக்ர சிக்ஷா திட்டத்தின் நிதியை நிறுத்தியது குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.


கேள்வி: கூற்று மற்றும் காரணம் வகை


கூற்று: அரசு பள்ளிகளில் இந்தித் திணிப்பை தமிழ்நாடு நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது, மேலும் எழுச்சி பெறும் இந்தியாவிற்கான பிரதம மந்திரி பள்ளிகளில் இணைய மறுத்துவிட்டது. எனவே ஒன்றிய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை நிறுத்தி வைத்துள்ளது.


காரணம்: தமிழக அரசின் இரு மொழி கொள்கையையும் மற்றும் தேசிய அளவில் அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும் மத்திய அரசு சரியாக அங்கீகரித்தாலும், 2020 ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையின் மூலம் அது பொதுப் பட்டியலில் ட்டியலில் இடம் பெற்றுள்ள துறைகளில் தனது பங்களிப்பை வழங்க விரும்புகிறது. இது தமிழக அரசால் கூட்டாட்சி நிர்வாக முறை என்ற கருத்திற்கு எதிரானதாகக் கருதப்பட்டு கடுமையாக எதிர்க்கப்படுகிறது.


(A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு


(B) கூற்றும் காரணமும் சரி, ஆயினும் காரணமே கூற்றிற்கான சரியான விளக்கம்


(C) கூற்று தவறு. காரணம் சரி


(D) கூற்றும் காரணமும் சரி ஆயினும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல


(E) விடை தெரியவில்லை


இந்த கேள்விக்கான பதில் '(B) கூற்றும் காரணமும் சரி, ஆயினும் காரணமே கூற்றிற்கான சரியான விளக்கம்' ஆகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent