முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்துடன் கவர்னரிடம் மாணவர் ஒருவர் பட்டம் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 87வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டமளிப்பு விழாவை நடத்தி 1014 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். சமீப காலங்களாக கவர்னருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வந்தது.
அதன் காரணமாக பட்டமளிப்பு விழாக்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பதில்லை. அந்த வகையில் இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார். மேலும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்துடன் கவர்னருடன் மாணவர் ஒருவர் பட்டம் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பிறகு முழு சோதனைக்குப் பிறகே மற்ற மாணவர்கள் மேடையேற அனுமதிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக