இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களின் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க புதிய கொள்கை!

திங்கள், 23 மார்ச், 2026

மாணவர்களின் மன நலனைப் பாதுகாக்கவும், தற்கொலை சம்பவங்களைத் தடுக்கவும் தமிழக அரசு வெளியிட்ட புதிய கொள்கை:

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மன நல ஆலோசகர்கள், ஆலோசனை மையங்கள் மூலம் மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிப்பதுடன், நண்பர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் நல்லாதரவு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.

இளைஞர் மன்றங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் 14416, 14417, 104, 1098, 181 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ள ஊக்கப்படுத்துவது அவசியம்.

தீவிர மன நல பாதிப்பு உள்ள மாணவர்களை அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள், பெற்றோர், ஆலோசகர்கள், சக மாணவர்கள் என அனைவரது பங்களிப்பும் அவசியம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent