இந்த வலைப்பதிவில் தேடு

சட்டப்பேரவைத் தேர்தல் - ஏப்.23ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை

வியாழன், 19 மார்ச், 2026




தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு.


தேர்தல் நடைபெறும் நாளில் தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நாள் (ஏப்.23) அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி அன்றும், மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29-ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அங்கும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக உரிமையை எந்தவிதத் தடையுமில்லாமல் பயன்படுத்துவதை உறுதி செய்யும்வகையிலும், எந்த அச்சமும் இல்லாமல் வாக்களிப்பதையும் நினைவில்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent